உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் சூரத் நகரத்தில் உள்ள குடியானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீக் படேல் (21). பிரதீக் படேல் பளு தூக்குவதில் ஆர்வமுள்ளவராக இருந்த நிலையில் புகழ்பெற்ற நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார். தொடர்ந்து ஜிம் சென்ற அவர் அங்கு எடுக்கும் விடியோக்களை தினமும் ரீல்ஸ் பதிவிட்டு வந்தார்.
இதுவரை, 300-க்கும் மேற்பட்ட ரீல்ஸ்களை அவர் பதிவிட்டிருந்தாலும் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7,923-ஆக மட்டுமே இருந்துள்ளது.
ஆனால், இவரைவிட மற்றவர்களுக்கு பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இவருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீண்ட நாள்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர், ஏப். 1 அன்று விஷம் அருந்தி கிராமத்தின் கிரிக்கெட் மைதானத்தில் விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் சூரத் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீக் பலியானார்.
இன்ஸ்டாகிராம் மோகத்தால் அவர் பலியானது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.