``இண்டியா, பாஜக, விஜய் அணி என 3 கூட்டணிகள் தேர்தலில் களமிறங்கும்'' - மாணிக்கம் த...
தோனி ஓய்வு எப்போது? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவது எப்போது என ஃபிளெமிங் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சேப்பாகில் தோல்வியை சந்திக்காத சிஎஸ்கே அணி தற்போது தோற்றுக்கொண்டே வருகிறது.
26 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்த தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதாவது:
தோனி ஓய்வு குறித்து நான் முடிவெடுக்க முடியாது. எனக்கு அது குறித்து எந்தத்திட்டமும் இல்லை. அவருடன் வேலைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
தோனி இப்போதும் வலுவாகவே இருக்கிறார். இதைப் பற்றி கேட்கக்கூட முடியாது. ஆனால், நீங்கள்தான் (செய்தியாளர்கள்) ஓய்வு குறித்து பேசுகிறீர்கள்.
தோனிக்கு அடிக்க வேண்டும் என எண்ணம் இருந்தது. ஆனால், பந்து சற்று நின்று வந்தது. முதல்பாதி பிட்ச் நன்றாக இருந்தது. 2ஆம் பாதி மெதுவாக ஆகிவிட்டது என்றார்.