முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டனஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?
மீண்டும் டாப் ஆர்டர் சொதப்பல்
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சிறப்பாக விளையாடத் தவறினர். டிராவிஸ் ஹெட் (8 ரன்கள்), அபிஷேக் சர்மா (18 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (17 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின் ஜோடி சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் கிளாசன் அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினர். இருப்பினும், கிளாசன் 27 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
4️⃣/1️⃣7️⃣ - Best bowling figures ✅
— IndianPremierLeague (@IPL) April 6, 2025
1️⃣0️⃣0️⃣ #TATAIPL wickets ✅
A sweet homecoming for Mohd. Siraj as he rattles #SRH with a sensational spell!
Scorecard ▶ https://t.co/Y5Jzfr6Vv4#SRHvGT | @mdsirajofficialpic.twitter.com/cupAsMF0a2
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.