டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!
தொடர்ச்சியாக 4 தோல்விகள்; சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பயிற்சியாளர் கூறுவதென்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றியுடன் தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
முதல் போட்டிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் சன்ரைசர்ஸின் டாப் ஆர்டர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பயிற்சியாளர் கூறுவதென்ன?
பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முன்னேற்றம் தேவைப்படுவதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 4 போட்டிகளாக சன்ரைசர்ஸ் அணி எவ்வாறு செயல்படுகிறது என்பது அணியில் உள்ள அனைவருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால், இதற்கு பிறகுதான் அணிக்கான உண்மையான சவாலே இருக்கிறது. தோல்விகளிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?
ஒவ்வொரு அணிக்கும் இதுபோன்ற தொடர்ச்சியான தோல்விகள் இருக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு நமக்கு இன்னும் 5 நாள்கள் இடைவெளி இருக்கின்றன. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட நாம் தயாராக வேண்டும் என்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி அதன் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.