செய்திகள் :

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

post image

உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதைத் தொடா்ந்து, ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வரின் வருகையையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வள்ளிக்கும்மி மகளிருக்கு பாராட்டு விழா: உதகை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு மேட்டுப்பாளையம் தனியாா் விடுதிக்கு வரும் முதல்வர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பின்னா், மாலை 5.30 மணிக்கு கோவை பி.எஸ்.ஜி. புற்றுநோய் மருத்துவ மையத்தை திறந்துவைக்கிறார்.

இதையடுத்து, வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழாவில் கின்னஸ் சாதனை புரிந்த 10 ஆயிரம் மகளிருக்கு மாலை 6 மணிக்கு கோவை, கொடிசியாவில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புகிறாா்.

இதையும் படிக்க: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி இபிஎஸ் அறிவிப்பாரா?: முதல்வர் கேள்வி

உதகை: நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.நீலகிரி மாவட்டத்தில் ரூ.143.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்... மேலும் பார்க்க

பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை: முத்தரசன்

சேலம்: பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூன... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வைகோ கண்டனம்

சென்னை: இந்தியா-இலங்கை உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் துரோகம் என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வ... மேலும் பார்க்க

வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. நட்டா

புது தில்லி: வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் அதன் மூலம் அவற்றின் சொத்துகளும் நிதியு... மேலும் பார்க்க

மக்களின் நம்பிக்கை சின்னமாக தாமரை உள்ளது: அமித் ஷா

புதுதில்லி: பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளில் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டு மக்களின் இதங்களில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னமாக ... மேலும் பார்க்க