சொந்த வீடு கட்ட போறீங்களா? உங்கள் பட்ஜெட்டில் கடைபிடிக்க வேண்டிய `13' கோல்டன் ரூ...
நடிகர் ‘சஹானா’ ஶ்ரீதர் மரணம்; சின்னத்திரை நடிகர்கள் அஞ்சலி!
சின்னத்திரையில் பரிச்சயமானவர் ஶ்ரீதர் சுப்பிரமணியம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ தொடரிலும் இவர் நடித்திருந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘வள்ளியின் வேலன்’ தொடரிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ‘அழியாத கோலங்கள்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் இரண்டிலும் கவனம் செலுத்தியவர் பின் நாட்களில் தொலைக்காட்சி தொடர் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். கே பாலச்சந்தர் தொடரிலும் இவர் நடித்திருந்தார்.
இவர் நடித்திருந்த ‘சஹானா’ தொடர் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்ததையடுத்து ‘சஹானா’ ஶ்ரீதர் என்கிற பெயரும் இவருக்கு கிடைத்தது. 62 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவசர, அவசரமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ஶ்ரீதர் இயற்கை எய்திருக்கிறார்.

அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல்கள் ஶ்ரீதர்!