அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?
`பாலசந்தர் சார் தொடங்கி வச்ச பயணம்' - `சஹானா' ஸ்ரீதர் மறைவு; கலங்கும் நண்பர்கள்
சீரியல் நடிகர் ஶ்ரீதர் நேற்று பிற்பகல் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாகக் கூறுகின்றனர். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கே.பாலச்சந்தர் எழுதி இயக்கி வெளிவந்த 'சஹானா' தொடரில் நடித்ததால் இவரை டிவி ஏரியாவில் 'சஹானா' ஶ்ரீதர் என்றே அழைப்பார்களாம். மேலும் பாம்பே ஸ்ரீதர் என்றும் சிலர் அழைப்பார்கள் என்கிறார்கள்.

ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த பல சீரியல்களில் நடித்துள்ள ஶ்ரீதர் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘வள்ளியின் வேலன்’ தொடரில் ஹீரோயினியின் அப்பாவாக அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஸ்ரீதரின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம்.
‘’ரொம்ப பேச மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய சீன் முடிஞ்சுடுச்சுன்னா அமைதியா ரூமுக்குப் போயிடுவார். ரெண்டு மூணு நாள் முன்னாடி ‘வள்ளியின் வேலன்’ செட்ல இருக்கிறப்ப உடல் நிலை சரியில்லைன்னு சொல்லி மருத்துவமனை போறதாச் சொல்லிட்டுப் போனார். அதன் பிறகு நேற்று அவருடைய மரண செய்திதான் கிடைச்சிருக்கு. கொஞ்ச நாளாகவே அவருடைய உடல் நலன்ல சில பிரச்னைகள் இருந்ததாச் சொல்றாங்க.அதனாலேயே அமெரிக்காவுல இருக்கிற ஒரே மகள் சில தினங்களுக்கு முன்னாடியே இங்க வந்திட்டாங்க’’ என்கின்றனர்.ஸ்ரீதரின் மனைவி மருத்துவராம். தவிர முதியோர் இல்லம் ஒன்று அமைத்து அதையும் பராமரித்து வந்தாராம் இவர்.ஸ்ரீதர் மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.