செய்திகள் :

``அடுத்த குறி கிறிஸ்தவர்கள் மீதுதான்..." - எச்சரிக்கும் ராகுல் காந்தி

post image

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை 2025 பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. ``சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் தலையிட்டு அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி. ஆர்.எஸ்.எஸ்ஸின் அடுத்த இலக்காக கிறிஸ்தவ சமூகம் இருக்கலாம்" என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான Organiser இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதில், ``இந்தியாவில் உள்ள கத்தோலிக்க நிறுவனங்கள் அரசு சாரா நில உரிமையாளர்களாக 7 கோடி ஹெக்டேர் நிலத்தை வைத்திருக்கின்றன." என கிறிஸ்தவர்களை குறிவைத்திருக்கிறது. சர்ச்சைக்குகளுக்கு மத்தியில் அந்தக் கட்டுரை நீக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுரை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அதுவே எதிர்காலத்தில் பிற சமுதாயங்களை குறிவைக்கும் மாதிரியாக மாறும் என்றும் நான் கூறியிருந்தேன்.

கிறித்தவர்களே அடுத்த இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நமது அரசியலமைப்பே இப்படியான தாக்குதல்களில் இருந்து மக்கள் பாதுகாக்கும் ஒரே கவசம்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரான ரமேஷ் சென்னித்தலா, “இது கிறித்தவ சமூகத்தின் சொத்துகளை அரசு குறிவைக்கும் முன்னோட்டம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இன்று முதல் அது சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.

அட்டைப்படம்

அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க

''இவ்வளவு கொடுத்தும், போதவில்லை என அழுகிறார்கள்'' - ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி மறைமுக தாக்கு!

பாம்பன் கடல் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார். இதற்கான விழாவில் பங்கேற்ற அவர், ''அன்பு தமிழக சொந்தங்களுக்கு வ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டு மண்ணில் நின்று பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும்!'- ஸ்டாலின் கோரிக்கை என்ன?

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது நாடாளுமன்ற தொ... மேலும் பார்க்க

புதிய பாம்பன் தூக்கு பாலத்தைத் திறந்துவைத்து மோடி; சிறிது நேரத்தில் ஏற்பட்ட பழுது... என்ன நடந்தது?

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு புதிய பாம்பன் பாலத்தைத் திறந்துவைப்பதற்காக இன்று மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார... மேலும் பார்க்க

புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ - அதிர்ச்சி கொடுக்கும் திமுக

புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகளைத் தவிர... மேலும் பார்க்க