அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?
3 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!
புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு நாளை(ஏப். 7) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
திருவாரூர்
தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஏப். 7 ஆம் தேதி நடைபெறவிருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
தென்காசி
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறையையொட்டி நாளை ஏப். 7-ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசுப் பொதுத்தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரதமர் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு!