CPIM Congress: ``பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்'' - புதிய பொதுச்செயலாளர் எம்...
PBKS vs RR: "இந்தத் தோல்விகூட நல்லதுதான்" - விவரிக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்
ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அதையடுத்து, 206 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப், முதல் ஓவர் முதலே ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டும் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டிக்குப் பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், ``உண்மையில், 180 - 185 ரன்கள் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சேஸ் செய்வதற்கு அது நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். இருப்பினும், எங்கள் பிளானை செயல்படுத்த முடியவில்லை. தொடரின் ஆரம்பத்திலேயே இது நடந்தது கொஞ்சம் ஓகேதான். போட்டியில் சற்று நிதானமாக ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும், இந்தப் போட்டியில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி இல்லை. பவுலிங் மற்றும் பேட்டிங்கில் எந்த இடத்தில் எங்கள் பிளானை செயல்படுத்தமுடியவில்லை என்பதை நாங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிரஷரில் நேஹல் வதேரா சிறப்பாக விளையாடினார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் பவுலர்களை அடித்தார். தொடரின் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் தேவை. எனவே, இந்தத் தோல்விகூட நல்லதுக்கென்று நினைக்கிறேன்" என்றார்.