செய்திகள் :

தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் கைது!

post image

ஆவடி: ஆவடி அருகே தனியார் நிறுவனத்தின் ரூ.1 கோடியிலான தரவுகளை திருடிய வழக்கில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த மருத்துவரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை(ஏப். 5) கைது செய்தனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல், சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய் பாலாஜி (47). இவர், இதே பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த காஷ்மீரைச் சேர்ந்த உமர் சபீர், ஆவடி அருகே அயப்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் பணிபுரிந்த காலத்தில் நிறுவனத்தின் தரவுகளை திருடியுள்ளனர். பின்னர் இவர்கள் இருவரும் அயப்பாக்கத்தில் தனியாக நிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் ஜெய் பாலாஜி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவர் நிறுவனத்தின் தரவுகளை தனது மின்னஞ்சல் முகவரிக்கு மாற்றம் செய்துள்ளார் அதன் பிறகு, அந்த தரவுகளை வாட்சாப் மூலமாக செந்தில்குமாருக்கு அனுப்பிள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்,

ஜெய் பாலாஜி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, அங்குள்ள தரவுகளை தனது மின்னஞ்சலுக்கு அனுப்பியதும், தொடர்ந்து செந்தில்குமார், உமர் சபீர் ஆகியோருடன் வாட்சாப் மூலமாக தொடர்பிலும் இருந்துள்ளார். இதனால் ஜெய் பாலாஜி நிறுவனத்திற்கு ரூ.1கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து ஜெய் பாலாஜி ஆவடி காவல் ஆணையரகத்தில்

கடந்த ஆண்டு புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக

மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த ஹிலன் (47), ஆவடி அருகே அயப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (32), ஆவடி, பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (33) ஆகியோரை கடந்த ஆண்டு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த

அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பூபந்த் அரிபாய் தேஷாய் என்பவர் இந்தியாவில் இருந்து தப்பி சென்று அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து போலீஸார் அவர் இந்தியாவிற்கு வந்தால், தகவல் தெரிவிக்கும் அனைத்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அளித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை (ஏப்.5) பூபந்த் அரிபாய் தேஷாய் குஜராத் மாநிலம், அகமதாபாத் வருவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் தனிபடை போலீஸார் சனிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது, பூபந்த் அரிபாய் தேஷாய் (79)(படம்) என்பவரை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் கைது செய்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு இரவு அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் வேட்டி - சட்டையுடன் பிரதமர் மோடி!

தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேசுவரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இலங்கை அனுர... மேலும் பார்க்க

பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? முதல்வர் விளக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.உதகையில் ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை... மேலும் பார்க்க

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா!

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவையொட்டி திருக்கொடி ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது. இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன், சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக... மேலும் பார்க்க

உதகைக்கு புதிய பாதை: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

உதகைக்கான மூன்றாவது பாதையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் பார்க்க

சிதம்பரம் கோதண்ட ராமர் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் மேல ரதவீதியில் உள்ள கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.சிதம்பரம் மேல வீதியில் அமைந்து... மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு நாளை(ஏப். 7) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்... மேலும் பார்க்க