'முதலாம் ஆண்டு மாணவரிடம் கேட்டால் கூட சொல்லுவார்!' பிரதமரை சாடிய ப.சிதம்பரம்
பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!
இயக்குநர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் படத்தை அறிவித்துள்ளனர்.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு அந்தகன், தி கோட் போன்ற இரு திரைப்படங்கள் வெளியாகின.
அந்தகன் திரைப்படம் ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
அதேபோல, தி கோட் படத்திலும் அவரது நடிப்பும் நடனமும் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நடிகர் பிரசாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது பிரசாந்தின் 55-வது படமாகும்.
இயக்குநர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.