மது ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் குமரி அனந்தன்! - விஜய் இரங்கல்
சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ்: இறுதிப் போட்டி யில் மோதும் பெகுலா - கெனின்
அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உள்நாட்டு வீராங்கனைகளான ஜெஸ்ஸிகா பெகுலா - சோஃபியா கெனின் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெகுலா 6-2, 2-6, 7-5 என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வெளியேற்றினாா்.
அரையிறுதியின் மற்றொரு ஆட்டத்தில் கெனின், 8-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவுடன் மோதினாா். இதில் கெனின் முதல் செட்டில் 5-2 என முன்னிலையில் இருந்தபோது அனிசிமோவா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
இதையடுத்து இறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்ட கெனின், அதில் பெகுலாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறாா். இருவரும் இதுவரை 5 முறை சந்தித்திருக்க, பெகுலா 3 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.