'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது...
Travel Contest: "ப்ப்பா... நம்ம முன்னோர்கள் என்னாமா வாழ்ந்திருக்காங்க" - வியக்க வைத்த கீழடி சுற்றுலா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சுற்றுலா என்றதும் எங்கள் வீட்டில் முதல் சாய்ஸ் என்னோடது. ஏன்னா, நான் இன்ட்ரெஸ்டிங்கா டூரை வடிவமைப்பேன்னு எல்லோருக்கும் தெரியும். அப்புறம்தான் மத்தவங்க விருப்பம். எப்டியும் எல்லார் விருப்பமும் கைகூடும். அப்டிக் கிளம்பினதுதான் கீழடிச் சுற்றுலா.
ப்ப்ப்ப்ப்பா… என்னாமா வாழ்ந்திருக்காய்ங்கய்யா நம்மாளுகன்னு அப்டியே வியந்து போற பண்பாடு அது.
எல்லா நதிக்கரை நாகரிகங்களையும் தூக்கி வளர்த்த இடம். அங்க போயே ஆகணும்னு ஆசை. வழக்கம்போல எங்கே டூர் போறமோ அந்த இடத்தைப் பற்றிய கம்ப்ளீட் அனாலிஸிஸ் ஒன்னு ரெடி பண்ணிட்டேன்.

போகும்போதே ஒவ்வொன்னாச் சொல்லிக்கிட்டே இருந்தேன். பிள்ளைங்களும் கணவரும் ஆர்வமாகிட்டாங்க. நிறையப் பேசிக்கிட்டே போனோம்.
வாங்க இப்ப நாங்க பாத்துட்டு வந்த கீழடிக்கு உங்களக் கூட்டிட்டுப் போறேன். நான் கீழடிச் சுற்றுலாவை நேரடியா உங்களுக்குக் காட்டப் போறேன். அதனாலதான் பேச்சுத் தமிழ்ல இந்தக் கட்டுரையை எழுதறேன்
அதுக்கு முன்னாடிக் கீழடியைப் பாத்துட்டு வந்த குஷியில நான் எழுதின கவிதை ஒன்னு:
கீழடி தமிழரின் வேரடி
..............................................
நைல் நதி முதலாய் நாகரிகங்கள்
தழைத்து ஓங்கிடத் தாய்ச்சீர் செய்தது
வரி எழுத்துகள் வடிவம் பெற்றிட ஓட்டினில் கீறிச் சான்றாய் அளித்தது
ஆழிசூழ் உலகின் நிர்வாணம் மறைக்க அன்பால் நெய்த உடுக்கை தந்தது
வைகைக் கரையில் வளமாய்த் தமிழன் வாழ்ந்து காட்டிய தாய்மடி கீழடி
தொன்மம் என்பதே பெருங் கனவென உரைத்த வார்த்தையை உண்மையென்றாக்கி
வைகை நதியை வரலாற்று நதியென வான்புகழ் பெற்றிட வகைமை தந்தது
வேர்களைத் தேடிய பயணம் ஒன்றில் ஆதன் முதலாய் முப்பாட்டன்கள்
செய்த வணிகமும் செழித்த தமிழும் ஆதித் தமிழனின் பெருமை சொன்னது
வணிகப் பெருவழிப் பாதை செய்து உலகை நேர்வழி நடத்திச் சென்றது
முத்திரைக் கட்டையும் எழுத்தாணிகளும் உறை கிணறுகளும் ஓடுகள் அமைப்பும்
தக்களிகளும் சுட்ட செங்கல்லும்
தமிழனே தலைமகன் என்றே கூற
சிவந்த கீழடி மண்ணின் பெருமை
மூவாயிரம் ஆண்டுகள் மூத்தே
நின்றது
தமிழர்தம் பெருமை சிகரம் ஏறிட நிலத்தைக் கொடுத்தோர் தலைமுறை வாழ்க
அல்லும் பகலுமாய் அரும்பாடுற்று
அகழ்ந்து அள்ளிய பெருமைகள்
வெல்க
-கி.சரஸ்வதி
இப்படி ஒரு கவிதையை என்னை எழுத வைத்தது கீழடி.

கீழடி தரிசனம்:
கீழடி அப்டிங்கற பெயர்ப்பலகையைப் பார்த்ததுமே எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு. குஷி. நம்ம முன்னோர்கள் வாழ்ந்து சிறந்த இடம். நாகரிகம்னா என்னன்னு உலகத்துக்குச் சொன்ன இடம்.
தமிழனின் பரந்த மனசையும் உச்சகட்ட அழகியல் உணர்வையும் காட்டிய இடம். ஒவ்வொரு மனிதனும் கண்டு வியக்க வேண்டிய இடம். அந்த இடத்துக்குள்ள இப்ப போகப் போறோம்.
நுழைஞ்சதுமே கீழடின்னு அழகா ஒரு பெரிய பெயர்ப் பொறிப்பு. அங்க ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் வாங்க. வரலாறு முக்கியம் அமைச்சரே.
அப்புறம் ஓட்டுக் கூரையும் தூண்களும் கொண்ட அழகான கட்டிடத்துக்குள்ள போறோம். பழையபடி அதே பெருமித உணர்வு. இனி அதே உணர்வோட ஒவ்வொரு இடமா பாத்துட்டு வருவோம்.

வரலாற்றுச் சான்றுகள்:
.................................................
சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்குப் பிறகு, இரண்டாம் நிலை நகர நாகரிகங்கள், தமிழ்நாட்டுல தோன்றவில்லை என்ற கருத்து இருந்துச்சு.
அதற்கு மாறாய் ,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியது அப்டிங்கறதுக்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைச்சிருக்கு.
வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம்தான் கீழடி. சிவகங்கை மாவட்டத்துல இருக்கு.
தமிழகத்துல அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வு. இங்க 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைச்சிருக்கு.
சங்க இலக்கியப் பாடல்கள் சொல்ற பொருட்கள் எல்லாமே இங்கே கிடைச்சிருக்கு. இது வரலாற்று ஆய்வாளா்களையும், சங்கத்தமிழ் ஆா்வலா்களையும் மகிழ்ச்சியில திளைக்க வச்சிருக்கு.

கீழடி நம் வேரடி:
...............................
குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டுறதை நாம பாத்திருப்போம். இந்த முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துக்கிட்டுதான் இருக்குது.
சங்க இலக்கியமான பத்துப்பாட்டுல பட்டிணப்பாலைங்கற நூலில் பூம்புகார் நகரத்தோட ஒருபகுதியில உறைகிணறுகள் இருந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்காங்க.
பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” அப்டின்னு சொல்றாரு. அந்தச் சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டிருக்கு. அழகா இருக்கு பாக்குறதுக்கு. வீடுகள்ல குளியலறைகள் இருந்திருக்கு.
நூல் நூற்கும் தக்ளி, அந்தக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருக்காங்கங்கறதுக்குச் சான்றா இருக்கு.
பட்டிணப்பாலையில குறிப்பிடப்படுற சுடுமண் உறைகேணிகளும் இங்க இருக்கு சுட்ட செங்கற்களால கட்டப்பட்ட வீடுகளுக்குப் பக்கத்துல இந்தக் கேணிகள் இருக்கு.
அதிகளவுல செங்கல் வீடுகள் இருக்கு. வீடுகளோட மேற்கூரையில ஓடுகள் வேயப்பட்டிருக்கு. இதெல்லாம் இங்க கிடைச்ச சான்றுகள் மூலம் உணர முடியுது.
சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்கள்ல குறிப்பிடப்பட்டிருக்கற கல்மணிகள் மட்டுமே 600 கிடைச்சிருக்காம்.

முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள் (அப்ப இருந்தே நாங்க ஸ்டைலாக்கும்), பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் இந்த மாதிரிச் சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்க அதிகளவில் கிடைச்சிருக்கு.
முதல்கட்ட ஆய்வில் கிடைச்சதைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள கண்டுபிடிச்சிருக்காங்க.
அந்தக் கால மக்கள் பயன்படுத்தின சுடுமண் முத்திரைக் கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மண்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைச்சிருக்கு.
அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் இங்கெல்லாம் அகழாய்வில் கிடைச்சதைவிட அதிக எண்ணிக்கையில தொடா்ச்சியாகப் பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டிருக்கு.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லைங்கற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைச்சிருக்கு.
கீழடியில் கண்டறியப்பட்ட கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைச்சிருக்கு.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைச்சதும் இதுதான் முதல்முறையாம்.

இப்ப நான் சொன்ன எல்லா ஆதாரங்களையும் அழகா வகைப்படுத்தி கண்காட்சியா வச்சிருக்காங்க. ஒவ்வொரு கட்டிடமாப் போயி இதையெல்லாம் நாம பாக்கலாம். ரசிக்கலாம்.
அங்க பழங்காலத்து எழுத்துகளைக் கொண்டு வார்த்தைகள் உருவாக்கி அதைக் கண்டுபிடிக்கற விளையாட்டும் வீடியோவா இருக்கு. அதை விளையாடிப் பார்ப்போம் வாங்க.
ஐ… அந்த விளையாட்டுல நான் ஜெயிச்சுட்டேனே.
அப்புறம் அந்தக் கண்காட்சி இருக்கற இடத்துல இருந்து ஒரு கிலோ மீட்டர் போனா அகழாய்வு நடக்கற இடத்தைப் பாக்கலாம். அங்க இன்னும் பணிகள் நடந்துட்டு இருக்கு.
மக்கள் ரொம்ப ஆர்வமாகப் பார்வையிட வராங்க. உறைகிணறுகள் அழகா இருக்கு. நீர் மேலாண்மையில ரொம்ப உயரம் தொட்டிருக்காங்க தமிழர்கள்.
பார்த்துப் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கு. அவசியம் உங்களுக்குத் தெரிஞ்சவங்கக் கிட்ட சொல்லுங்க. நம்மளப் பத்தி நாம நல்லா தெரிஞ்சுக்கறதும் அடுத்த தலைமுறைக்குச் சொல்றதும் முக்கியமில்லையா?
அங்க விதம்விதமாப் புகைப்படங்கள் எடுத்துக்கிட்டோம். சந்தோஷமாக் கிளம்பினோம். ஒரு திருப்தியான சுற்றுலாவா அமைஞ்சுது.
கார்கள் நிறுத்த நிழலோட ஒரு ஷெட் போட்டிருக்கலாம். வெயில் நேரத்துல கஷ்டமா இருக்கு. அதே போல வெயில்ல ஒவ்வொரு கட்டிடமாகப் போயிப் பாக்கறதுக்கு வழியில கால் சுடாம இருக்க ஏதாச்சும் செய்யணும்.
மே மாசம் கூட்டம் வரும் நேரம். சின்னவங்க பெரியவங்கன்னு எல்லோரும் வர்ற இடம். நிழல் செஞ்சு குடுத்தா நல்லாருக்கும். இன்னும் தண்ணீர் வசதி, ஓய்வறைகள் செஞ்சு தரலாம். கீழடி பற்றிய புக்லெட் தரலாம்.
பேருந்தில் வர்றவங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் அடிக்கடி விடலாம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.