செய்திகள் :

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

post image

வரி Vs வரி

இதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று.

தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அதிகம் கொண்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார் ட்ரம்ப்.

குற்றம்சாட்டியதோடு மட்டும் நின்றுவிடாமல், அதிபராக பதவியேற்றதும் சீனா மீது கூடுதலாக 10 சதவிகித வரி விதித்தார்.

அதன் பின்னர், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரியை அறிவிக்கும்போது மீண்டும் சீனாவின் மீது 34 சதவிகித வரியை விதித்தார்.

ட்ரம்ப்பின் பரஸ்பர வரி
ட்ரம்ப்பின் பரஸ்பர வரி

இப்படி ஒவ்வொரு முறை அமெரிக்கா சீனா மீது வரி விதித்தப் போதும், பதிலடியாக, அமெரிக்கா மீது சீனா வரி விதித்தது.

அமெரிக்கா வரி விதிக்க, பதிலுக்கு, சீனா வரி விதிக்க என தற்போது சீனாவின் மீதான அமெரிக்க வரி என்பது 245 சதவிகிதத்தில் வந்து முடிந்துள்ளது... மன்னித்துவிடுங்கள்... இது முடிவு என்றுகூட சொல்ல முடியாது. மீண்டும் தொடரக்கூட செய்யலாம்.

அனைத்து நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாள்களுக்கு அமெரிக்கா ஒத்திவைத்தாலும், சீனாவிற்கு மட்டும் ஏப்ரல் 9-ம் தேதி முதலே பரஸ்பர வரி அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

எப்படி இருந்த நான்; இப்படி ஆயிட்டேன்

பரஸ்பர வரிக்கு பிறகு, உலக சந்தைகள் மிகவும் அடிவாங்கியது. ட்ரம்பின் வரி அறிவிப்பின் எதிரொலியாக அமெரிக்க பொருளாதாரமும் தாக்கத்தை அனுபவித்தது. இதற்கு நல்ல உதாரணம், அமெரிக்கா பங்குச்சந்தையின் கடும் சரிவு.

ஆரம்பத்தில், சீனா பதிலடியாக வரி விதித்தபோது, அதிரடியாக வரி விகிதத்தை மேலும் உயர்த்தி வந்தார் ட்ரம்ப். ஆனால், இப்போதும் வரி விகிதத்தை உயர்த்தினாலும், முன்னாள் இருந்த முறுக்கு ட்ரம்ப்பிடம் இப்போது இல்லை.

காரணம், அவர் சீனா எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு முன்வரும் என்று முன்பு நினைத்திருந்தார். ஆனால், சீனா கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை.

இதன் விளைவாக, ட்ரம்ப் தொடர்ந்து 'சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்' என்று தொடர்ந்து வெள்ளைக்கொடி காட்டி வந்தார். ஆனால், சீனா பக்கத்தில் இருந்து எந்த அசைவும் இல்லை.

அசைந்து கொடுக்காத சீனா; ஆடிப்போன ட்ரம்ப்
அசைந்து கொடுக்காத சீனா; ஆடிப்போன ட்ரம்ப்

சீனா நகர்த்தும் காய்

அதற்கு பதிலாக, சீனா அமெரிக்காவிற்கு எதிராக பிற நாடுகளை திருப்ப காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கு ஆஸ்திரேலிய உடனடியாக 'நோ' சொல்லிவிட்டது.

சீனாவின் தூதிற்கு இந்தியா இன்னும் வாயை திறக்கவில்லை.

ஆசிய குடும்பங்களே...

இந்த நிலையில், நேற்று மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜின் பிங், "நாடுகளுக்கு இடையே உருவாகி உள்ள அரசியல் பிரிவினைவாதம் மற்றும் அரசியல் பிரச்னைகளை சரிசெய்ய சீனா மற்றும் மலேசியா இணைந்து பக்கத்து நாடுகளுடன் செயல்படும்.

ஆசிய குடும்பங்களின் எதிர்காலத்தை ஒற்றுமையாக பாதுகாப்போம்" என்று பேசியுள்ளார்.

வெறும் சிரிப்பு

தற்போதைய அமெரிக்காவின் 245 சதவிகித வரி விதிப்பிற்கு, சீனாவின் வர்த்தக அமைச்சகம், "அமெரிக்கா வரியை உயர்த்தி வருவது என்பது வெறும் பெரிய எண்களை காட்டத்தான். இது பொருளாதாரத்திற்கு உதவாது.

அமெரிக்கா, வர்த்தகத்தை பிறருக்கு அழுத்தம் கொடுக்கவும், பயமுறுத்தவும் தான் பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் இந்த செயல் வெறும் சிரிப்பை தான் தருகிறது" என்று கூறியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு தயார்!

மேலும், "நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். அமெரிக்காவிற்கு இந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சரிப்படுத்த வேண்டுமானால், அழுத்தம் கொடுப்பது, பயமுறுத்துவது, மிரட்டுவது போன்றவற்றை நிறுத்த வேண்டும்.

அதற்கு பதிலாக, சீனா உடன் சமமாகவும், மரியாதையாகவும், பரஸ்பர நன்மைக்காகவும் பேச வேண்டும்" என்று சீனா கூறியுள்ளது.

'ஆசிய குடும்பங்களே!' - ஜின்பிங்
'ஆசிய குடும்பங்களே!' - ஜின்பிங்

சீனா தான் ஃப்ர்ஸ்ட்

இப்போது ட்ரம்ப்பும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்... சீனாவும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றாகிவிட்டது. அப்போது ஏன் இன்னமும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்பதை பார்க்கலாம்.

சீனா இன்றுதான் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியுள்ளது.

முன்பிருந்தே ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். அவர் எதிர்பார்ப்பது எல்லாம் சீனா முதலில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதுதான்.

உலகத்திற்கே சாதகம்!

இந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது இந்த இரு நாடுகளை தாண்டி அனைத்து நாடுகளுக்கும் பிளஸ். இரண்டுமே உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள்.

அமெரிக்கா பெரும்பாலும் ஒரு முழுப் பொருளை தான் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும். அதற்கு அடிப்படை தேவை மூலப்பொருட்கள். மூலப்பொருட்களை அமெரிக்கா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அப்படி இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா டாப் இடத்தில் இருக்கிறது.

அமெரிக்கா வரி விதிக்க... சீனா வரி விதிக்க என இருநாடுகளும் மாறி மாறி வரி விதித்துக்கொண்டிருந்தால், அந்த நாடுகளில் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயரும். அந்தப் பொருட்களை நுகரும் பிற நாடுகள் விலைவாசி உயர்வால் பாதிக்கும். உலக பொருளாதாரம் பாதிக்கும்.

மேலும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் வரி உயரும்போது, அமெரிக்கா பாதிக்கப்படும். அமெரிக்கா பாதிக்கப்பட்டால் தங்கம் விலை, பங்குச்சந்தை, உலக வங்கிகள் என அனைத்துமே பாதிப்பை சந்திக்கும்.

அமெரிக்கா, சீனா - அடுத்து என்ன?
அமெரிக்கா, சீனா - அடுத்து என்ன?

அமெரிக்கா என்ன செய்யும்?

ஏற்கெனவே, 'சீன அதிபர் நல்லவர்... வல்லவர்' என அவ்வப்போது புகழ்ந்து வருகிறார் ட்ரம்ப். அதற்கேற்ற மாதிரி, நீண்....ட நாட்கள் கழித்து சீனா பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரமாக போட்டுக் கொண்ட வரிகளை குறைக்கலாம்... இதனால், உலகப் பொருளாதாரத்திற்கு நன்மை உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, இவர்கள் எவ்வளவு சீக்கிரம் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார்களோ, அவ்வளவு உலகத்திற்கு நல்லது.

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க

`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், ... மேலும் பார்க்க