தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கப்படவுள்ள தொழிற்சாலைப் பணிகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சில முக்கிய துறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பாா்க்கப்படுகிறது.
அண்மையில் நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையான நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது உச்சநீதிமன்றம்: ஜகதீப் தன்கர் காட்டம்