செய்திகள் :

Insurance: காப்பீடும் முதலீடும்; ஒரு நிமிஷம்! இன்ஷூரன்ஸ் எடுக்க போறீங்களா? எடுத்தாச்சா? இதைப் படிங்க

post image

தலைக்கு தலைக்கவசம், வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ்! தலைக்கவசம் எப்படி நம் உயிரைக் காக்குதோ அதேமாதிரி நம் உடல் நலம் பாதிக்கப்பட்டா மருத்துவ காப்பீடும், நாம் உயிரிழந்தா நம்ம குடும்பத்தை ஆயுள் காப்பீடும் காக்கும். அதனாலதான் ஒரு குடும்பத்துக்கு மருத்துவ காப்பீடும், குடும்பத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆயுள் காப்பீடும் அத்தியாவசியம். 

சரி, ஆயுள் காப்பீடு & மருத்துவ காப்பீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்களை இங்க பார்ப்போம்...

மருத்துவக் காப்பீடு

மருத்துவ காப்பீடு:

- யாருக்கு மருத்துவ காப்பீடு? - உங்களுக்கா இல்ல மொத்த குடும்பத்துக்கான்னு முதலில் முடிவெடுங்க (குடும்பத்துக்கே எடுப்பதுதான் நல்லது).

- எவ்ளோ காப்பீடு வேணும்னு முடிவு பண்ணுங்க - பொதுவா 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 5-10 லட்சம் குறைந்தபட்ச காப்பீடு இருப்பது அவசியம்.

- காப்பீட்டில் என்ன கொடுக்குறாங்கன்னு பாருங்க - தங்கும் வசதி, ஆபரேஷன், முக்கியமான நோய்கள் எல்லாம் கவர் ஆகுதான்னு பாருங்க.

- நல்ல மருத்துவமனைகள் இருக்கா? - உங்க காப்பீட்டில், உங்களுக்கு அருகே இருக்கும் நல்ல மருத்துவமனைகள் கட்டணமின்றி சிகிச்சை தருதான்னு பாருங்க.

- காத்திருப்பு நேரம் & க்ளெய்ம் - மருத்துவத்துக்காக நீங்க செய்த செலவு திரும்பவும் கிடைக்க எவ்ளோ நாள் ஆகும்னும், அது சிக்கலின்றி கிடைக்குமான்னும் உறுதி செஞ்சுக்கோங்க.

ஆயுள் காப்பீடு (எனும் டெர்ம் இன்ஷூரன்ஸ்)

- உங்களுக்கு எவ்ளோ காப்பீடு வேணும்னு முடிவு பண்ணுங்க - உங்க ஆண்டு வருமானத்தின் 10 - 20 மடங்கு தொகைக்கு காப்பீடு எடுப்பது நல்லது.

- எவ்ளோ நாளைக்கு பிரீமியம் கட்டணும்? - பொதுவா நீங்க ரிட்டையர் ஆகும் வயது வரை அல்லது நீங்க பொருளாதாரத்தில் தற்சார்பு அடையும் காலம் வரை டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது.

- பணம் எப்படி செலுத்த போறீங்க? - மாதாமாதமா? வருஷாவருஷமா? இல்ல லிமிட்டெட் பே-வாகவா? (உதாரணம் - 20 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் செலுத்துவது, ஆனா கவரேஜ் உங்க 60 வயது வரை கிடைக்கும்)

- தேவையான ரைடர்களை சேர்க்கவும் - தீராத வியாதி, ஆக்சிடென்ட் போன்ற சிறப்பு விஷயங்களை வேணும்னா சேர்த்துக்கோங்க

- க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ - எந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி 90%-க்கும் மேல க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ கொண்டிருக்கோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது (90% என்பது 10-ல்  9 பேருக்கு செட்டில்மென்ட் போயிருக்கு என்பதை குறிக்குது.)

காப்பீடும் முதலீடும்

நீங்க இன்ஷூரன்ஸ் எடுக்க போறீங்களா? மேலும் காப்பீடு தொடர்பாக உங்க சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கணுமா? நீங்க எடுத்திருக்கும் காப்பீடு உங்களுக்கு சரியானதான்னு தெரிஞ்சுக்கணுமா? விகடன் 'லாபம்' வழங்கும் 'காப்பீடும் முதலீடும்' வெபினாரில் தவறாம கலந்துக்கோங்க!

நாள்: ஏப்ரல் 20, 2025, ஞாயிறு

நேரம்: காலை 11 மணி

பேச்சாளர்கள்: கிருஷ்ண தாசன், டைரக்டர், தனவிருக்ஷா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் & ஏ. ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & முன்னாள் நாணயம் விகடன் ஆசிரியர்

150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். கட்டணம் ஏதுமில்லை.

முன்பதிவுக்கு: https://forms.gle/sYKY3fafb5SBSbgQ8

ட்ரம்ப் அதிரடி... பங்குச் சந்தை இனி எப்படி போகும்? ஃபண்ட் நிபுணர் சுனில் சுப்பிரமணியம் விளக்கம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் அதிரடி நடடடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறார். கடந்த வாரத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கும் இறக்குமதி வரியை ஏகத்துக்கும் உயர்த்தி, அன... மேலும் பார்க்க

முட்டை, ஜூஸ் வியாபாரிகளுக்கு கோடிகளில் வந்த வருமான வரி நோட்டீஸ் - நமக்கு வந்தால் என்ன செய்வது?

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரிக்கு ரூ.6 கோடி வருமான வரி நோட்டீஸ், உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஜூஸ் வியாபாரிக்கு ரூ.7.5 கோடி வருமான வரி நோட்டீஸ்...இப்படியான செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இ... மேலும் பார்க்க

₹ 70,000-த்தை நெருங்கும் சவரன் - ஏன் எல்லாரும் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறாங்க?

சரியா 25 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு சவரன் தங்கம் விலை ₹3500, இன்னைக்கு₹ 70,000-த்தை நெருங்கியாச்சு! கடந்த 25வருடங்கள்லகிட்டத்தட்ட 20 மடங்கு வளர்ச்சி. நீங்க அப்போ 1 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கி வச்சிர... மேலும் பார்க்க

'வருமான வரி முதல் ஆதார் கார்டு வரை' - இன்று முதல் அமலுக்கு வரும் 7 நிதி அறிவிப்புகள்!

இன்றிலிருந்து 2025-26 புதிய நிதியாண்டு தொடங்குகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றிலிருந்து பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம். முதல் மற்றும் முக்கிய அறிவிப்பு என்னவென்றால் கடந... மேலும் பார்க்க

உங்கள் பணத்திற்கு நீங்கள் 'எஜமானி'யாக 12 கோல்டன் ரூல்ஸ்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானி; கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்...இந்தப் பாட்டு ஞாபகமிருக்கிறதா...'இந்தப் பாட்டை மறக்க முடியுமா? இது நம்ம தலைவர் பாட்டே' எ... மேலும் பார்க்க

பணம் சேர்க்கும் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை வெபினார்

நீங்க கஷ்டப்பட்டு, லிட்டர் கணக்குலவேர்வைசிந்தி சம்பாதிச்சபணம், பேங்க் சேவிங்ஸ்அக்கவுண்ட்ல, ஏ.டி.எம் நைட் வாட்ச்மேன் மாதிரி தூங்கிட்டு இருக்கா? நிதிச் சுதந்திரம்அடையணும்னுநினைக்கிறீங்க, ஆனா முதலீடுன்னா... மேலும் பார்க்க