பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்
உங்கள் பணத்திற்கு நீங்கள் 'எஜமானி'யாக 12 கோல்டன் ரூல்ஸ்!
கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானி; கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்...
இந்தப் பாட்டு ஞாபகமிருக்கிறதா...'இந்தப் பாட்டை மறக்க முடியுமா? இது நம்ம தலைவர் பாட்டே' என்பது தானே உங்கள் மைண்ட் வாய்ஸ்.
தலைவர் பாட்டு என்பதை கொஞ்சம் விடுத்து, அந்தப் பாட்டின் கருத்தை எடுத்துக் கொள்ளலாம்.
நம்மிடம் கையில் கொஞ்சம் காசு இருந்தாலும் சரி, கழுத்து வரைக்கும் காசு இருந்தாலும் சரி, கண்டிப்பாக நாம் தான் அதற்கு எஜமானியாக இருக்க வேண்டும்.

'பணத்திற்கு எப்படி எஜமானியாக ஆக வேண்டும்?' என்பதை விளக்குகிறார் நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்.
"எப்போதுமே நமக்கும், காசிற்கும் இருக்கும் பந்தம் சிக்கலானதாகவே இருக்கிறது. 'பணம் முக்கியம்... பணம் தான் முக்கியம்... பணம் மட்டும் தான் முக்கியம்' என்று அது நமக்கு சர்வாதிகாரியாக இருப்பதுபோல அல்லாமல், அதற்கு பாஸாக நாம் மாற வேண்டும்.
அதற்கான ரூல்ஸ் இதோ...
நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பணம் 'வெறும் கருவி' தான் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய மதிப்பு, சந்தோஷம் ஆகியவற்றை பணத்தை வைத்து மதிப்பிடாதீர்கள். உங்களையும், திறனையும் நீங்கள் மேம்படுத்தும்போது, தானாக, நீங்கள் பணத்தை வைத்து உங்களின் மதிப்பை நிர்ணயிப்பது நின்றுவிடும்.
நிதிக் கல்வி படியுங்கள்
பணம் நம் கையில் இல்லாமல் போகும்போது தான், நமக்கு அது பெரிய விஷயமாக தெரியும். அதனால், எதற்கு, எவ்வளவு பணம் வேண்டும் என்பதை பக்காவாக பிளான் செய்து, அதை உங்கள் கையில் இருப்பதுபோல பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு பணத்தேவையில் எந்தப் பிரச்னையும் எழாது; பணமும் பெரிய விஷயமாக தெரியாது.
'காசு இல்லை... பணம் இல்லை' என்று எந்தவொரு நிதி சம்பந்தமான மன அழுத்தத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். அப்போதிருக்கும் பணத் தேவைக்கு என்ன செய்யலாம் என்று பிராக்டிக்கலாக யோசியுங்கள். அதே சமயம், பணத்தின் பின் ஓடுவது மட்டும் திருப்தியை தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சேமிப்பு, முதலீடு, செலவு போன்றவற்றை பற்றிய நிதிக் கல்வியைக் கற்றுகொள்ளுங்கள். இது அனுபவத்தின் மூலமாகவும் கிடைக்கும் அல்லது இதற்கு எதாவது நிதி ஆலோசகரின் உதவியை நாடலாம்.

பயப்பட வேண்டாம்!
'எதற்கு பணம் தேவை?' என்று தெரியாமல் ஓடுவதை விட, 'எதற்கு வேண்டும்... அது எவ்வளவு காலத்திற்குள் வேண்டும்?' என்று குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்து ஓடுங்கள். அப்போது எவ்வளவு வேண்டும் என்று தெரிந்துவிடும். அதற்கேற்ப ஓடலாம்... மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருப்பவர்கள் சந்தை இறக்கங்களின்போது பயப்படாதீர்கள். அது ஒரு இயல்பான நிகழ்வே. அதனால், அவசரப்பட்டு பங்குகளை விற்பது, சந்தையில் இருந்து பணத்தை வெளியே எடுப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள்.
'இது' கட்டாயம்
பணத்துடன் எந்த எமோஷனல் இணைப்பும் வைத்துக்கொள்ளாதீர்கள். அது வெறும் கருவி மட்டும் தான்.
பணம் சம்பந்தமான விஷயங்களில் உணர்ச்சிப்பூர்வ முடிவுகளை எடுக்காதீர்கள்.
பணத்தை தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை என பிரித்து பிரித்து முதலீடு செய்யுங்கள். இது உங்களின் பணம் குறித்தான பயத்தை போக்கும்.
செலவுகளை குறைத்தாலே நீங்கள் பணத்திற்கு பாஸ் ஆகிவிடலாம்.
நிதி ஒழுக்கத்தை கட்டாயம் வளர்த்துக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் பின்பற்றினாலே, நீங்கள் பணத்திற்கு சூப்பரான எஜமானி ஆகிவிடலாம்".