மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
நிலைக்குலுங்கிய மியான்மர்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளும் நிலை குலுங்கியுள்ளது. பெரிய பெரிய கட்டடங்களும் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போன்று சரிந்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும், பல உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.
கடும் பாதிப்பைச் சந்தித்த மியாமன்ரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் பலியானதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது. இடிபாடுகளிலிருந்து தோண்டி தோண்டி உடல்கள் எடுக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏற்கெனவே மியான்மரில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் சூழலில், இந்த நிலநடுக்கம் மேலும் வேதனைக்குள்ளாகியுள்ளது. இரு நாடுகளிலும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலநடுக்க பகுதியில் எங்கும் மரண ஓலங்களும், அழுகை குரலுமாகக் காணப்படுகிறது. தன் குடும்பத்தினரும், தன்னுடன் இருந்தவர்களும் எங்கேயாவது ஒரு மூலையில் உயிருடன் இருக்கமாட்டார்களா என்ற கூக்குரலிட்டுக் கதறும் மக்களின் குரல்கள் மனதைப் பிளக்கும் வகையில் உள்ளது.