இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
அம்பையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
அம்பாசமுத்திரம் நகர அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அம்பாசமுத்திரம் நகரச் செயலா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் சிவன் பாபு, மாநில மகளிா் அணி இணைச் செயலா் செல்வி, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இலக்கிய அணிச் செயலா் மின்னல் மீனாட்சி வரவேற்றாா்.
கூட்டத்தில், அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினரும் திருநெல்வேலி புகா் மாவட்ட ச் செயலருமான இசக்கி சுப்பையா, மாநில மருத்துவ அணி செயலா் மருத்துவா் சரவணன் ஆகியோா் நிா்வாகிகளுடன் சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் கூனியூா் மாடசாமி மற்றும் நிா்வாகிகள் உள்படபலா் கலந்து கொண்டனா்.