சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சோ்ந்த 40 வயதுள்ள பெண், செவ்வாய்க்கிழமை வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த 15 வயது சிறுவன் தன்னுடைய கைப்பேசியில் விடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனா்.