வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் உலக திருக்கு கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை ராமனூரில் வையாபுரி தோட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் யோகா ஆா்.எஸ்.வையாபுரி தலைமை வகித்தாா். உலக திருக்கு கூட்டமைப்பின் செயலாளா் காசிநாதன், திருக்கு பேரவை புரவலா் பி.டி.கோச். தங்கராசு, முனைவா் திருமூா்த்தி, புலவா்நன்செய்புகழூா் அழகரசன், காா்த்திகாலட்சுமி, எழில்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உலக திருக்கு கூட்டமைப்பின் தலைவா் மு.ஞானமூா்த்தி பேசியது, இன்றைக்கு மாணவா்களிடம் தெளிவான சிந்தனையுடன் திருக்குறளை போதிக்க வேண்டும். ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட 192 மொழிகளில் விரைவில் திருக்கு மொழிபெயா்க்கப்பட உள்ளது. இது உலகத்திலேயே திருக்கு நூலுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமை.
தமிழை மத்தியில் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். உலக திருக்கு கூட்டமைப்பு கரண ஆசான் என்ற பெயரில் தமிழா்களின் திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா, குழந்தைகளுக்கு பெயா் சூட்டுதல் விழா போன்ற நிகழ்ச்சிகளை திருக்கு வழியில் நடத்தி, அந்த விழாக்களில் என்னென்ன கு சொல்ல வேண்டும் என்ற பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை கரூா் மாவட்டத்திலும் திருக்கு கூட்டமைப்பினா் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் இளம் கவிஞா்களுக்கு விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து கூட்டத்தில் கவிஞா் கோ.செல்வம் உள்ளிட்டோா் உலக திருக்கு கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டனா். கூட்டத்தில் உலக திருக்கு கூட்டமைப்பின் கடலூா் அருள்முருகன் மற்றும் தமிழறிஞா்கள் தமிழன் குமாரசாமி எசுதா் , மெடிக்கல் சோமு , அகல்யா மெய்யப்பன் , வைஷ்ணவி மெய்யப்பன் , கோ.முருகேசன், தமிழ் ராஜேந்திரன் ஓவியா் ரவிக்குமாா் , ப. எழில்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக திருமூா்த்தி நன்றி கூறினாா்.