'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Expert...
டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. இது மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், காஃபி, சாக்லேட் மற்றும் பிற பொருட்கள் உள்பட பல பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பொருள்கள் மீது கடும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும் என்றும் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா்.
இந்தநிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார். அதன்படி, இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்! - முதல்வர் ஸ்டாலின்
அதிபர் டிரம்ப் நேற்று ஆற்றிய உரையில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள பல நாடுகளில் 10% அடிப்படை வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய பொருள்களுக்கு சலுகையுடன் கூடிய வரிவிதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் காபி கொட்டைகளில் சுமார் 80 சதவிகிதம் லத்தீன் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. மேலும் பிரேசில் 35 சதவிகிதம் மற்றும் கொலம்பியா 27சதவிகிதத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி வருகின்றன. இதனால், இரு நாடுகளும் 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளன.
சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோகோ பீன்ஸ், கோட் டி'ஐவோயர், ஈக்வடார் மற்றும் கானாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகன்றன. இவைகளுக்கு முறையே 21 சதவிகிதம் மற்றும் 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கோகோ வெண்ணெய் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வருவதால் அவற்றுக்கு முறையே 32 சதவிகிதம் மற்றும் 24 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிலிருந்து சீனா காலணிகளில் 37% இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த மதிப்பு 9.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சீனாவுக்கு 54% வரி விதிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் ஒயின் வகைகளுக்கு 20 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை வென்று 50 ஆண்டுகள் நிறைவு! விழாவாகக் கொண்டாடும் மே.இ.தீவுகள்!