செய்திகள் :

இங்கிலாந்து டி20 கேப்டனாகிறார் ஹாரி புரூக்!

post image

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக இளம் வீரர் ஹாரி புரூக் நியமிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், ஒருநாள் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள், டி20 தொடர்களில் டி 20 தொடரை 1-4 என்றும், ஒருநாள் தொடரை முழுமையாகவும் இங்கிலாந்து அணி இழந்தது. இதனால், தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜோஸ் பட்லர் தெரிவித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு அணியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் தோல்வியைத் தழுவியது.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் இரண்டு கைகளில் பந்துவீசிய கமிந்து மெண்டிஸ்! விக்கெட்டும் வீழ்த்தினார்!

இதனால், டி20 அணியின் கேப்டனாக இளம் வீரர் ஹாரி புரூக் விரைவில் நியமிக்கப்படலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ தெரிவித்திருக்கிறார்.

26 வயதான ஹாரி புரூக் கடந்தாண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தலைமைத் தாங்கியிருந்தார். மேலும், இந்தியா - இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு அவர் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜெட்டா நகரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை, தில்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.6.25 கோடிக்கு எடுத்தது. இருப்பினும், ஐபிஎல் தொடரில் இருந்து புரூக் பாதியில் விலகினார். இதனால், அவர் ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்தம்!

மும்பையை வென்றது லக்னௌ

ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகுகிறாரா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆலி ஸ்டோன் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர... மேலும் பார்க்க

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், சாம்பியன்ஸ் டிராபி... மேலும் பார்க்க

நியூசி. ஒருநாள் தொடர்: மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம்!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 84 ... மேலும் பார்க்க

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நியமனம்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, தலைவராக இலங்கையின் ஷம்மி சில்வாக்குப் பின்ன... மேலும் பார்க்க

மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா?

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பையில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை மும்பை கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.ரஞ்சி கோப... மேலும் பார்க்க