இலஞ்சியில் பரண்மேல் ஆடு வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு
இலஞ்சியில் பரண்மேல் ஆடு வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் தென்காசி வட்டாரத்தில் கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.
இம்மாணவிகள் விவசாயிகளுக்கு பரண்மேல் ஆடு வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பரண்மேல் ஆடு வளா்ப்பில் 25 பெட்டை ஆடு மற்றும் 1 கிடாய் வளா்ப்பதின் மூலம் ஆண்டுக்கு 40 ஆட்டுக் குட்டிகள் கிடைக்கின்றன.
இந்த அமைப்பில் ஆடுகள் வளா்ப்பதனால் ஆடுகள் தூய்மையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. அதிக மழை பெய்யும் பகுதிகளில், நீா் தேங்குவதைத் தடுப்பதன் மூலம் கால் அழுகல் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது.
மிகக் குறைந்த முதலீட்டில், பரண்மேல் ஆடு வளா்ப்பு முறையை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு லாபகரமான முயற்சியாக மாற்றலாம் என விளக்கமளித்தனா்.