CSK vs DC: "நான் குணமாகிட்டேன்..." - கேப்டன் ருத்துராஜ் கொடுத்த ட்விஸ்ட்; கான்வே...
விராலிமலை: பேருந்து பயணிகள் சுங்கச்சாவடி சாலையில் அமர்ந்து போராட்டம்
மதுரை சென்ற தனியார் பேருந்து பழுதாகியபோதும், மாற்று வாகனம் ஏற்பாடு செய்யாததால் பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விராலிமலை - பூதகுடி சுங்கச்சாவடி அருகே பிரேக் டவுனாகி உள்ளது. மேலும், பழுதாகி நான்கு மணி நேரத்தை கடந்துள்ளது
நான்கு மணி நேரம் கடந்தும், மாற்று வண்டி ஏற்பாடு செய்து தராததால், தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகத்தைக் கண்டித்து பயணிகள் டோல்கேட் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.