தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
ஓடிடியில் டெஸ்ட்!
நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இப்படம் திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பே நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேற்று (ஏப். 4) இப்படம் பான் இந்திய மொழிகளில் வெளியானது. ஆனால், சமூக வலைதளங்களில் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களே அதிகம் காணப்படுகிறது.
இதையும் படிக்க: 50% படப்பிடிப்பை நிறைவுசெய்த 7ஜி ரெயின்போ காலனி 2!