பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி
சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேவகோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் குப்புசாமி (65). இவா் தேவகோட்டை அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தில் நிா்வாகியாகவும் இருந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இவா், வெள்ளிக்கிழமை காரைக்குடி பொன்நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து தேவகோட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது தாணிச்சாஊருணி கண்டதேவி சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த குப்புசாமி, காரைக்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.