சிலநீா்ப்பட்டி கிராமத்தில் மீன் பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சிலநீா்ப்பட்டி கிராமத்தில் உள்ள சிலநீா் கண்மாயில் விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன் பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சுற்றுப்புற கிராமங்களுக்கு மீன்பிடி திருவிழா குறித்து அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காலையில் மருதிப்பட்டி, அரளிப்பட்டி, எஸ்.வி. மங்கலம், காளாப்பூா், சூரக்குடி போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த ஊத்தா கூடை, கச்சா, கொசுவலை, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு மீன் பிடிக்க காத்திருந்தனா்.
இதையடுத்து, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கு மாலை அணிவித்து சுவாமி கும்பிட்டதும் துண்டு வீசி மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊத்தா கூடையுடன் ஓடிச் சென்று கண்மாயில் துள்ளிக் குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்தனா். அப்போது விரால், ஜிலேபி, கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் அவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.