உதகை: இ-பாஸ் கட்டுப்பாடுகளால் கடும் போக்குவரத்து நெரிசல்!
உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டுப்பாடு விதித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாடுகாணியில் உள்ள சோதனைச் சாவடியில் இ-பாஸ், வாகன வரி உள்ளிட்ட பரிசோதனைக்குப் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் சுமார் 8 கி.மீ. தூரம் வரிசையாக காத்திருக்கும் நிலைக்கு தளளப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.