"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்" - சமுத்த...
ஊருக்குள் நுழையும் யானைகளைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வன ஊழியா்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதியில் தினமும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள்
நுழைந்து வருவதால் பொதுமக்கள் வெளியே நடமாடமுடியாமல் அச்சத்தில் உள்ளனா்.
காட்டு யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி கவுன்சிலா் அனீபா தலைமையில் வன அலுவலகம் முன் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் வனத் துறையினா் ட்ரோன் கேமராவுடன் ஒரு குழுவை இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியது. இக்குழுவினா் ட்ரோன் கேமரா மூலம் கிராமத்தைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டா் தொலைவில் காட்டு யானைகள் இருக்கிா எனக் கண்காணித்து யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.