பஞ்சாப்: மாணவர்களுடன் கால்வாயில் விழுந்த தனியார் பள்ளி பேருந்து
பஞ்சாபில் மாணவர்களை அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து, நிலைதடுமாறி, செம் கால்வாயில் விழுந்து, விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, மாணவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, மாணவர்களுடன்கூடிய தனியார் பள்ளி பேருந்து கால்வாயில் விழுந்து விபத்தான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் குறித்த தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். விபத்தில் சிக்கிய அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் குறித்து மேற்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிக்க:வெற்றி நடையில் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்