"ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்க இயலாதென எங்கு கூறப்பட்டிருக்கிறது?" - உச்ச ...
மீரட் கொலைச் சம்பவம்: குழந்தைக்கு உரிமை கோரும் குடும்பங்கள்
மீரட்: முன்னாள் விமானப் படை வீரர் சௌரவ் ராஜ்புத், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகியால் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது ஆறு வயது குழந்தைக்கு உரிமைகோரு இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது.
தனது தந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதோ, தாய் எங்கிருக்கிறார் என்பதோ அக்குழந்தைக்கு தெரியவில்லை. இருவரும் ஒன்றாக, விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருக்கலாம் என்றே நினைத்திருப்பார்.
தற்போது முஸ்கான் பெற்றோருடன் இருக்கும் அந்தக் குட்டிப்பெண் பிஹுவிடம், உண்மை எதையும் சொல்லாமல், எப்போது தாய் தந்தை பற்றி கேட்டாலும் பெற்றோர் இருவரும் லண்டன் சென்றிருப்பதாகவும் விரைவில் வந்துவிடுவார்கள் என்றே கூறியிருக்கிறார்கள்.