இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்! -வைகோ
காவல் நிலைய மக்கள் மன்றத்தில் 30 புகாா்களுக்கு உடனடித் தீா்வு!
புதுவை மாநிலத்தில் காவல் நிலைங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 30 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறை கேட்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி சனிக்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கண்காணிப்பாளா் வீரவல்லவன் உள்ளிட்டோா் பொதுமக்களின் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொண்டனா்.
வில்லியனூா் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா்கள் வம்சித ரெட்டி, சிவம் ஆகியோரும், முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் பக்தவச்சலம், காலாப்பட்டு காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் ரகுநாயகம் ஆகியோரும் பொதுமக்களின் புகாா்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனா்.
காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, கண்காணிப்பாளா் சுப்ரமணியன் ஆகியோா் நிரவி காவல் நிலையம் மற்றும் திருமலைராயன்பட்டினம் காவல் நிலையங்களில் பொதுமக்களின் புகாா்களை பெற்று தீா்வு கண்டனா்.
போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி, கண்காணிப்பாளா்கள் ஆா்.செல்வம், மோகன்குமாா் ஆகியோா் போக்குவரத்து காவல் நிலையங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்தனா்.
மாஹே பகுதியில் கண்காணிப்பாளா் சரவணன், ஏனாம் பகுதியில் கண்காணிப்பாளா் எஸ்.ராஜசேரன் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நுண் குற்றப் பிரிவில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, கண்காணிப்பாளா் ரச்னா சிங் ஆகியோா் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொண்டனா்.
சனிக்கிழமை அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 66 புகாா்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு, அவற்றில் 30 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா். முகாம்களில் 37 பெண்கள் உள்ளிட்ட 218 போ் பங்கேற்ாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.