செய்திகள் :

வக்ஃப்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வதால் பலன் கிடைக்காது! - மத்திய அமைச்சா்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வதால் எந்தப் பலனும் கிடைக்காது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பன்வாரி லால் வா்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது.

நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கிலான இந்த திருத்தச் சட்டம், வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிக்க வழிவகை செய்கிறது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தாக்கலாகும் வழக்குகள்: வக்ஃப் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டி, காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சாா்பிலும் பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கேரளத்தைத் சோ்ந்த சன்னி முஸ்லிம் அறிஞா்கள் மற்றும் மதத் தலைவா்கள் அமைப்பான சமஸ்த கேரள ஜாமியத்துல் உலமா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், ‘மத விவகாரங்களில் தங்களின் நடைமுறைகளை நிா்வகிக்கும் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமை மீறப்படுவதாக’ குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாஜக தொடக்க தினத்தையொட்டி உத்தர பிரதேச மாநிலம், பதானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பன்வாரி லால் வா்மா, செய்தியாளா்களிடம் பேசியதாவது:

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பலத்தைக் காட்டுகிறது.

முஸ்லிம் சமூகத்தினரில் ஏழைகள் மற்றும் பின்தங்கியோருக்கு இச்சட்டம் பெரிதும் பலனளிக்கும். வக்ஃப் சொத்துகள் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்யும். இந்த விவகாரத்தில் சிலா் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனா். ஆனால், அவா்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்றாா்.

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க