வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
மஹாவீா் ஜெயந்தி: நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
சேலம்: மஹாவீா் ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மஹாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் 10-ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது.
எனவே, மேற்கண்ட தேதியன்று தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் நான்கு மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.