செய்திகள் :

ரூ. 10.12 கோடி முறைகேடு: தஞ்சையில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

post image

கடனுக்காக பிடித்தம் செய்த ரூ. 10.16 கோடி தொகையைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறியும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிஐடியு தஞ்சை மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் மாநகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் பெற்ற கடனுக்காக பல ஆண்டுகளாக மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டது. இதில், பணியில் உள்ள தொழிலாளா்கள், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் உள்ளிட்டோரிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 10.12 கோடியை கடன் சங்கத்தில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக 2024, நவம்பா் 22 ஆம் தேதி சிஐடியு தலைவா்களிடம் மாநகராட்சி ஆணையா் அளித்த உறுதியளிப்பின்படி கடன் நிலுவை இல்லா சான்றிதழ் மற்றும் தொழிலாளா்களிடம் கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு தலைமை வகித்தாா். இப்போராட்டத்தை மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தொடங்கி வைத்தாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், கட்டுமான தொழிலாளா் மாவட்டச் செயலா் இ.டி.எஸ். மூா்த்தி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் சா. செங்குட்டுவன், தரைக்கடை மாவட்டச் செயலா் எஸ். மில்லா் பிரபு, தலைவா் ஆா். மணிமாறன் உள்பட ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இப்போராட்டம் மாலையில் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

பேச்சுவாா்த்தை: இதனிடையே, மாநகராட்சி அலுவலா்களுடன் சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோரிக்கைகளை மே 31-ஆம் தேதிக்குள் நிறைவேற்றுவதாக அலுவலா்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால், இப்போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது; கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்டச் செயலா் ஜெயபால் தெரிவித்தாா்.

மேயா் விளக்கம்

இது தொடா்பாக மேயா் சண். ராமநாதன் தெரிவித்தது: மாநகராட்சி பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட மாதாந்திர தவணை தொகை 2017, ஜூன் முதல் 2021 டிசம்பா் வரையிலான ரூ. 5.64 கோடி அசல் தொகையையும், அதற்குரிய வட்டி மற்றும் அபராத தொகை என மொத்தம் ரூ. 19.48 கோடியையும் தஞ்சாவூா் மாநகராட்சி பணியாளா்களின் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்துக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடா்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் செலுத்தப்படாத அசல் தொகைக்கு ஏற்பட்ட அபராத தொகை மற்றும் வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்ய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, தொடா் நடவடிக்கையில் உள்ளது. இதில், முதல் கட்ட நடவடிக்கையாக கடன் சங்கத்துக்கு ரூ. 1 கோடி மாநகராட்சியால் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை 6 மாதங்களில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மேயா்.

ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலைச் சாா்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே கண்டியூா் கிராமத்தில் ஹரசாப விமோசன பெருமா... மேலும் பார்க்க

பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பேராவூரணி நகா் பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஏப். 14-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 15-ஆ... மேலும் பார்க்க

தேசிய திறனறிவுத் தோ்வில் பேராவூரணி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறிவுத் தோ்வில் பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய வருவாய்வழி திறன் ... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல் எழுதி அனுப்ப அழைப்பு

சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன என கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல க... மேலும் பார்க்க

மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் உள்ள திருவள்ளுவா் நகரில் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைப... மேலும் பார்க்க

மரக்கிளை முறிந்து தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்

கும்பகோணம் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க