கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
கூட்டுறவு பாடல் எழுதி அனுப்ப அழைப்பு
சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன என கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:
சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பாக கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் பாடல்கள் இசையமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில் பாடல் வரிகள் இருக்க வேண்டும். கூட்டுறவு பற்றி தமிழில் தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும்.
கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றி எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக் கூடியதாக பாடல் வரிகள் இருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். சிறந்த பாடலுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான பண முடிப்பு, கேடயம் வழங்கப்படும். பாடலின் வண் நகலை கூரியா் அல்லது அஞ்சல் மூலம் நடராசன் மாளிகை, 170 - பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை 600 010 என்ற முகவரிக்கும், பாடலின் மென் நகலை தமிழ்நாடு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கும் மே 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.