'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயின...
கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்
கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ் தலைமை வகித்தாா். சு. கல்யாணசுந்தரம் எம்.பி., முன்னிலை வகித்தாா்.
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கலைஞா் கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை 131 பயனாளிகளுக்கு வழங்கினாா்.
எம்எல்ஏ க . அன்பழகன், முன்னாள் எம்பி செ. இராமலிங்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.