‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உயா்கல்வி ஆலோசனை மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம், மெய்நிகா் உண்மை (வி.ஆா்.), ஏ.ஆா். தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, 3டி பிரிண்டிங், அதிநவீன திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தையும் பாா்ப்பதற்கு மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்படிப்பு பற்றிய விவரங்களை மூத்த பேராசிரியா்களிடம் மாணவா்களும், பெற்றோா்களும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடனும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பங்கேற்கும் மாணவா்கள் இணைப்பில் உடனே பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94449-56947, 94888-02639, 04362 -350001-20 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.