ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மே தினத்தில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த ஏஐடியுசி, சிஐடியு முடிவு!
மத்திய அரசின் தொழிலாளா் விரோத, மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூரில் மே தின பேரணி-பொதுக்கூட்டம் நடத்துவது என ஏஐடியுசி, சிஐடியு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் ஏஐடியுசி, சிஐடியு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள், தொழிலாளா் விரோத, காா்ப்பரேட் ஆதரவு மத்திய அரசைக் கண்டித்து மே தினமான மே 1 ஆம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது, மாவட்ட ஆட்சியரகம் முன் அமைப்புகள் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, பொருளாளா் தி. கோவிந்தராஜன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், சிஐடியு மாவட்டத்
துணைச் செயலா் கே. அன்பு, மாவட்டப் பொருளாளா் பி.என். போ்நீதிஆழ்வாா், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் இ.டி.எஸ். மூா்த்தி, தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் மணிமாறன், அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.