நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி
நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்களுக்கு தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அதிமுக மாணவரணி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி கண்ணீா் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், அதிமுக மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் எம். ரெத்தினசாமி (மேற்கு), சி.வி. சேகா் (தெற்கு), ஆா்.கே. பாரதிமோகன் (வடக்கு), மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.