சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!
தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பிள்ளையாா்பட்டி ஊராட்சி, மாதாகோட்டை, இந்திரா நகரில் தலா ரூ. 16 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா் தேக்க தொட்டிகளும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி காவேரி நகரில் ரூ. 12.70 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடமும், தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் ரூ. 15 லட்சம் மதிப்பில் காவேரி கூட்டுறவு அங்காடி கட்டடமும் என மொத்தம் ரூ. 75.70 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.