ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
முதியவா் தூக்கிட்டு தற்கொலை
அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கணேசன் குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் கணேசன் தனது வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.