ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது சரக்கு ஆட்டோவில் 28 மூட்டைகளில் இருந்த 1,400 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தப்பிய சரக்கு ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனா்.