கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலைச் சாா்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
திருவையாறு அருகே கண்டியூா் கிராமத்தில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கா் 30 சென்ட் புஞ்சை நிலம் கோயில் கேட்பு பதிவேட்டில் அப்பாவு கவுண்டா் பெயரில் இருந்தது. தஞ்சாவூா் வருவாய் நீதிமன்ற ஆணைப்படி, நீதிமன்ற அமலாக்க வருவாய் ஆய்வாளா் புவனேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் சதீஷ், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், நில அளவையா் கலைச்செல்வன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை மீட்கப்பட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இந்த இடத்தில் அத்துமீறி நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.