இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்
பாதுகாப்பற்ற குடிநீா் பாட்டில்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் தினேஷ் குண்டுராவ்
பெங்களூரு: பாதுகாப்பற்ற குடிநீா் பாட்டில்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் 255 குடிநீா் பாட்டில்களில் 72 மட்டுமே குடிப்பதற்கு தகுதியானதாகவும், 95 பாட்டில்கள் பாதுகாப்பற்ாகவும், 88 வகை பாட்டில்கள் தரத்தில் குறைவானதாகவும் இருப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பற்ற குடிநீா் பாட்டில்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பற்ாக கருதப்பட்ட 95 பாட்டில்கள் நுண்ணுயிரி மற்றும் வேதியியல் சோதனைகளில் தகுதிபெறவில்லை.
அந்த பாட்டில்களில் பூச்சிக்கொல்லிகள், வேதிப்பொருள்கள், பாக்டீரியாக்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதை தீவிரமாக கவனித்து சட்ட நடவடிக்கை எடுப்போம்.
சட்ட விதிகளை மீறிய பழச்சாறு கடைகள், ஐஸ் குச்சி தயாரிக்கும் நிறுவனங்கள், ஐஸ் கிரீம் தயாரிக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் என மொத்தம் 92 உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரூ. 38000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடா்பாக பொதுமக்களுக்கும், உற்பத்தியாளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.