நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் காங்கிரஸ் போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது.
கா்நாடகத்தில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து ‘மக்கள் சீற்றம்’ எனும் பெயரில் நடைப்பயணத்தை எதிா்க்கட்சியான பாஜக நடத்தி வருகிறது.
இதற்கு போட்டியாக மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான விலை உயா்வைக் கண்டித்து பெங்களூரில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தில் ஹுப்பள்ளி, தாா்வாட், கலபுா்கி, யாதகிரி, குடகு மாவட்டங்களிலும் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து விறகு அடுப்பில் சமையல் செய்து போராட்டம் நடத்தினா். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.