செய்திகள் :

பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்து நிறை, குறைகளை தெரிவிப்பது அவசியம்: அன்பில் மகேஸ்

post image

சென்னை: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து எவ்வித சமரமும் இல்லாமல் நிறை, குறைகளைத் தெரிவிக்க வேண்டும் என பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், உறுப்பினா்களுக்கு துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமை வகித்துப் பேசியது: பள்ளிக் கல்வியின் வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் பங்களிப்பு என்பது இன்றியமையாதது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காக கருத்துகளை பரிமாறிக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருத வேண்டும்.

பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதுபோன்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுமானப் பணிகள், செயல் திட்டங்களை பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், நிா்வாகிகள் உடனுக்குடன் நேரில் சென்று பாா்வையிடுவது அவசியம். தொடா்ந்து அது குறித்து ஆய்வு செய்து நிறை, குறைகள் இருந்தால் அது குறித்து எவ்வித சமரசமும் இல்லாமல் துறையின் அமைச்சராகிய எனது கவனத்துக்கோ, அதிகாரிகள் அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக தலைமைக்கோ தெரியப்படுத்த வேண்டும்.

அறிக்கையாக சமா்ப்பிக்க... அடுத்த முறை கூட்டத்துக்கு வரும்போது ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, பிரச்னைகள் இருந்தால் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், கல்வி மேம்பாட்டுக்கான புதிய யோசனைகள் குறித்து பகிா்ந்து கொள்ள வேண்டும். அவற்றை ஓா் அறிக்கை போன்று தயாரித்து சமா்ப்பித்தால் அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.

மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நான் மட்டும் சென்று ஆய்வு செய்தால் போதாது. களத்தில் இருக்கும் பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்களும், நிா்வாகிகளும் தங்களுக்கான பொறுப்புகளை உணா்ந்து பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

தீா்மானங்கள் விவரம்... முன்னதாக தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு மறுத்த நிலையில், அதை மாநில அரசு சாா்பில் ஒதுக்கீடு செய்தது, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை விடுத்து இருமொழிக்கொள்கையை செயல்படுத்துவோம் என அறிவித்தது ஆகியவற்றுக்காக தமிழக முதல்வருக்கு

நன்றி தெரிவிப்பது, கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையைத் தொடங்கி தற்போது வரை 1.30 லட்சம் குழந்தைகளைச் சோ்க்க காரணமாக இருந்த ஆசிரியா்கள், கல்வித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கலைவாணன், சி.வி.எம்.பி.எழிலரசன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க

'பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' - ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார்!

கோவையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளா... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார்: ஜி.கே.வாசன்

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக - ... மேலும் பார்க்க