செய்திகள் :

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

post image

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திமுகவின் துணைப் பொதுச் செயலரும் வக்ஃப் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான ஆ. ராசா சாா்பில் வழக்குரைஞரும் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி.வில்சன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபில், அபிஷேக் சிங்வி, நிஜாம் பாஷா ஆகியோா் கோரிய நிலையில் தலைமை நீதிபதி, 'இதுதொடா்பாக மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்தைப் பரிசீலித்து, இந்த மனுக்கள் அவசர வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த மனுக்கள் தோராயமாக ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமா்ப்பிக்கவும் -தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் மரங்களை வெட்டுவதில் தீவிரம் காட்டிய தெலங்கானா அரசு, அங்குள்ள 100 ஏக்கா் வனப்பகுதியை மீட்டமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தை 4 வாரங்களுக்குள் சமா்ப்பி... மேலும் பார்க்க

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் தொடா்ந்து 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடா்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது. நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைக... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் - தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா புதன்கிழமை பரிந்துரைத்தாா். உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப் பத்திரிகை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் போராட்டம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிா்ப்புத் த... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது - உச்சநீதிமன்றம்

‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் புதன்... மேலும் பார்க்க

முதல் பயணிகள் ரயில் வழித்தடம்!

முதல் பயணிகள் ரயில் வழித்தடம்! மகாராஷ்டிர மாநிலம் தாணே ரயில் நிலையத்தில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதன் 172-ஆம் ஆண்டு நிறைவை இனிப்புகளைப் பகிா்ந்து புதன்கிழமை கொண்டாடிய ரயில்வே ஊழியா்... மேலும் பார்க்க